சிங்கப்பூரில் ஸ்மார்ட் டிரைவிங் சிஸ்டம் அறிமுகம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று(2611.25) முதல் அனைத்து வாகனங்களிலும் நிறுவப்படும் புதிய On-Board Unit (OBU) மூலம், ஓட்டுநர்கள் சாலையில் நடக்கும் நிகழ்நேர தகவல்களை நேரடியாக கேட்க முடியும்.
நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்ததாவது, இந்த “Smart Driving System” வசதி மூலம் விரைவுச் சாலைகளில் அல்லது பக்கவாட்டுச் சாலைகளில் நிகழும் விபத்துகள், வாகனப் பழுதுகள், சாலைப் பணிகள், பாதை மூடல்கள், போக்குவரத்து நெரிசல்கள் உள்ளிட்ட தகவல்கள் உடனுக்குடன் காட்சியளிக்கப்படும்.
இந்த தொழில்நுட்பம் ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிப்பதன் மூலம் பாதுகாப்பான மற்றும் தடையில்லா பயணத்தை உறுதி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விபத்துகள் நடந்த இடங்களைத் தவிர்த்து மாற்று பாதைகளை தேர்ந்தெடுக்கவும் இது உதவும்.
LTA வின் தகவலின்படி, புதிய அம்சங்கள் அடுத்த சில மாதங்களில் படிப்படியாக அனைத்து வாகனங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.