சட்டத்தை மீறிய Stamford Catering நிறுவனம்..!! SFA நடவடிக்கை..!!

சட்டத்தை மீறிய Stamford Catering நிறுவனம்..!! SFA நடவடிக்கை..!!

சிங்கப்பூர்: உணவு விற்பனை சட்டத்தை மீறியதற்காக Stamford Catering நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உணவு முகமை(SFA) S$8,000 அபராதம் விதித்துள்ளது.

Stamford Catering கேட்டரிங் நிறுவனத்தின் உணவை உட்கொண்ட பிறகு 160 பேருக்கு குடல் அழற்சி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் நல்வாழ்வு அமைச்சகத்திற்கும்,சிங்கப்பூர் உணவு முகமைக்கும் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்ததையெடுத்து SFA அதிகாரிகள் செனோகோரன் சாலையில் உள்ள அந்நிறுவனத்தின் வளாகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது.

தேங்கி நிற்கும் நீர், குளிர்பதன அறையில் உள்ள அழுக்கான மேற்கூரை மற்றும் பூச்சிகள் பெருக வாய்ப்புள்ள உணவு கறைகளுடன் மூடப்படாத மின் இணைப்புகள் உள்ளிட்ட பல உணவுப் பாதுகாப்புப் பிரச்சினைகள் விசாரணையில் கண்டறியப்பட்டன.

2024 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தனது செயல்பாடுகள் இடைநிறுத்துமாறு ஸ்டாம்ப் கேட்டரிங் நிறுவனத்திற்கு SFA உத்தரவிட்டிருந்தது. உத்தரவிட்டபடி நடவடிக்கைகளை செயல்படுத்திய பிறகு அந்த நிறுவனம் அதே ஆண்டு (2024) அக்டோபர் 30ம் தேதி அன்று மீண்டும் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.

கடந்த ஆண்டு (2025) பிப்ரவரியில் Stamford Catering நிறுவனத்தின் உணவை உட்கொண்ட 22 பேருக்கு இரைப்பை குடல் அழந்சி அறிகுறி ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு மற்றொரு புகார் கிடைத்துள்ளது.

வளாகத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் உணவையும் பல உணவு பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளது. அழுக்கான உணவு சூடாக்கிகள், பனிக்கட்டை தயாரிப்பான்கள் குளிர்பான இயந்திரங்கள் மற்றும் அழுக்கான சமையலறை மேற்கூரை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக SFA தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த குறைபாடுகளைச் சரி செய்வதற்கும், உணவு வளாகத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், உரிமம் பெற்ற நிறுவனத்திற்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK