சிங்கப்பூரில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!!!!!
சிங்கப்பூரில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!!
சிங்கப்பூர்: இன்றைய சூழ்நிலையில் இளம் வயதிலேயே டிமென்ஷியா அதிகமாக வருவதாக சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு முதுகலை படிப்புகளில் மைனர் திட்டத்தின் தலைவர் டாக்டர் கெல்வின் டான் கூறியுள்ளார்.
வாஸ்குலார் டிமென்ஷியா நோய்: அன்றாட வாழ்க்கையில் தலையிடும் அளவுக்கு கடுமையான மன திறன் குறைபாட்டைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல். இது பெரும்பாலும் வயதானவர்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும், இது இளையவர்களையும் பாதிக்கலாம்.
டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட தந்தையை பராமரித்த இளங்கலை மாணவர்: 36 வயதைச் சேர்ந்த திரு. எரிக் லிம், 2015 ஆம் ஆண்டு இறுதியாண்டு இளங்கலை மாணவராக இருந்தபோது அவரின் தந்தை 67 வயதில் இந்நோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவரின் தந்தை குடல் அசைவுகளை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து டயப்பரை பிடுங்கிக் கொண்டிருப்பார்.
இச்சம்பவம் திரு. லிம்மை பொறுமை இழக்கச் செய்தது. மேலும், அவரது நடத்தை மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. அவர் கூறியதாவது, என் அப்பாவிடம் பதிலளிப்பது மிகவும் கடினமாக இருந்ததாக கூறினார்.
2013-இல் டான் டோக் செங் மருத்துவமனைக்கு(TTSH) இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நோயாளிகளின் பதிவுகளின் படி, 60 ஆக இருந்தது.
2016 ஆம் ஆண்டு தேசிய நரம்பியல் நிறுவனம்(NNI), வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின் படி, இளம் வயதில் உள்ளவர்களே மூன்று மடங்குக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதன் எண்ணிக்கையை எண்களின் அடிப்படையில் குறிப்பிடவில்லை.
கடந்த பிப்ரவரி மாதத்தில் (2025) நடந்த ஆய்வின்படி, 65 வயதுடையவர்களிடையே டிமென்ஷியா நோய் பாதிப்பு 1990 ஆம் ஆண்டு 100,000 பேருக்கு 16.24 ஆக இருந்தது. பின்னர், 2021 ஆம் ஆண்டு 100,000 பேருக்கு 17.16 ஆக உயர்ந்துள்ளது பற்றி சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் குழுவால் வெளியிடப்பட்டது.
2023-இல் டான் டோக் செங் மருத்துவமனைக்கு(TTSH) இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நோயாளிகளின் பதிவானது, 90 ஆகவும், கடந்த ஆண்டு (2024) எண்ணிக்கையானது 80 ஆக சற்று குறைந்து இருந்தது.
மனநல நிறுவனம்(IMH) நடந்த ஆய்வில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: ✓டிமென்ஷியாவின் பாதிப்பு கடந்த பத்தாண்டுகளில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே சற்று குறைந்துள்ளது. ✓2013 இல் 10 பேரில் ஒருவருக்கு இருந்தது. ✓2023 இல் 11 பேரில் ஒருவராகக் குறைந்துள்ளது. ✓அதே காலகட்டத்தில் 51,934 இல் இருந்து 73,918 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது: 2030 க்குள் மொத்த எண்ணிக்கை சுமார் 152,000 ஆக அதிகரிக்கும்.