பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..??
திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேப்பமனுக்களை திரும்ப பெறுவதற்கு நேற்று (ஏப்ரல் 9) கடைசி நாளாகும். மேலும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்த அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு சட்டமன்ற தொகுதியில் சர்ச்சையை ஏற்படுத்திய சுவரொட்டியால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.
எங்கே? ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் வாக்கு கேட்டு வேட்பாளர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என ஜெயங்கொண்டம் மாவட்டத்திற்கு உட்பட்ட பிச்சனூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் சுவரொட்டி மூலம் கூறியுள்ளனர்.
காரணம் என்ன? அந்த சுவரொட்டியில்”பிச்சனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் மின்விளக்கு வசதி கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை நாங்கள் புறக்கணிப்பு செய்கின்றோம்” என்று சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது.