உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே என்ன நடந்தது? தீ விபத்தால் பரபரப்பு..!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே என்ன நடந்தது? தீ விபத்தால் பரபரப்பு..!

சிங்கப்பூர்: இன்று (ஜூலை 23) காலை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கார் விபத்து காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அடுத்துள்ள புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் மேம்பாலத்தில் இன்று (ஜூலை 23) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.

பாதுகாப்பை முன்னெச்சரிக்கை காரணமாக மேம்பாலத்தின் அனைத்து வழித்தடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதன் வழியில் செல்லும் வாகனங்கள் பழைய உட்லண்ட்ஸ் சாலைக்கு திருப்பி விடப்பட்டன.

அதே பகுதியில் அதிகாலை சுமார் 4:00 மணியளவில் 3 கார்கள் சம்பந்தப்பட்ட மற்றொரு கார் விபத்தும் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிங்கப்பூர் குடிவரவு சோதனைச் சாவடிகள் (ICA) ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, காலை 8:20 மணி அளவில் தீ அணைக்கப்பட்டு சிங்கப்பூருக்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களும் போக்குவரத்திற்காக முழுமையாக மீண்டும் திறந்து விடப்பட்டது.

மேலும் கார் விபத்தால் பாதிக்கப்பட்டு, வெளிச்செல்லும் திசையில் போக்குவரத்து விபத்துகளையும் சந்தித்த மேம்பாலம், காலை 8:28 மணி அளவில் போக்குவரத்திற்காக முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டதாக ICA தகவல் வெளியிட்டுள்ளது.