சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்..!! காரணம் என்ன..??
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து ஏப்ரல் 28 அன்று சென்னை வந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் அனைவரையும் அவர்களது உடைமைகளையும் சேர்த்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்தனர்.
அப்போது பயணிகளில் ஒருவராக வந்த இளைஞரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்தன. இதனை அடுத்து அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்ற நாடு திரும்பியது தெரியவந்துள்ளது.
உடனே அவரது பயணப்பெட்டியை திறந்து பார்த்தபோது 23 உறைகளில் ரூ.10.70 கோடி மதிப்புள்ள 10.70 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ந்த தரமுள்ள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. உடனே அந்த இளைஞரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.