சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர் : குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று ஒரு அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் இலங்கைசேயைச் சேர்ந்த ஒரு நபரை கைது செய்துள்ளது.

புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல், செயல்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துதல் மற்றும் சம்பவ இடத்திலேயே பதில் அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் சட்ட அமலாக்க அதிகாரிகளின் ஒருங்கிணைப்பும், தொழில் முறை திறனும் வெளிப்படுகிறது.

ஏப்ரல் 8-ஆம் தேதி அதிகாலை 5:00 மணி அளவில், சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்களது பணிகளைச் செய்யத் தொடங்கினர்.

அந்த நடவடிக்கையின் முடிவில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டாார்.

அந்த நபர் உட்லண்ஸ் இல் உள்ள 16 ப்ளாக், 574 இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் உள்ள கார் பார்க்கிங்கில் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அங்கு சென்ற அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

அந்த நபருடன் இன்னொரு வெளிநாட்டவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையின் போது அந்த நபர், சட்டப்பூர்வ வேலை அனுமதி அட்டையை காண்பித்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையில் ICA-வைச் சேர்ந்த 11 அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அந்த நபரின் சமூக வருகை விசா 2025 ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாகவும், கிட்டத்தட்ட அவர் 9 மாதங்கள் சிங்கப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2025 ஆம் ஆண்டு 538 பேர் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கி இருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 484 பேர் விசா முடிவடைந்த பின்னரும் அங்கு அனுமதி இன்றி தங்கி இருந்தவர்கள் என்று ICA தரவுகள் தெரிவிக்கின்றன.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK