கிராப் கார் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டிய பயணி..!! காரணம் என்ன..??
சிங்கப்பூர் : கிராப் கார் ஓட்டுநர் மீது பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு கிராப் நிறுவனம் அந்த ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
40 வயது பயணியான திரு.கியூ அவர்கள், இந்த மாதம் 12ஆம் தேதி அன்று அதிகாலை 5 மணி அளவில் ஒரு தனியார் வாடகை காரை(கிராப்) அழைத்துள்ளார். ஆனால் அந்த ஓட்டுநர் செயலியில் குறிப்பிட்டிருந்த இடத்தில் காத்திருக்காமல் அதற்கு எதிரேக் காரை நிறுத்தியுள்ளார்.
பயணிகளை ஏற்றி செல்லும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் முறையாக ஆடை அணிவது என்பதை அந்தக் கார் நிறுவனம் முடிவு செய்ய வேண்டும்.
ஓட்டுநர் அதிவேகமாக சென்றாரா என்பது அவருக்கு தெரியவில்லை. ஆனால் கார் மிகவும் வேகமாக சென்றுள்ளது. வேகத்தடைகளின் மீது ஏறி இறங்கும் போது வேகம் குறையவில்லை எனவும், அதனால் தனக்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கியூ அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
காரில் வயதான பயணிகள் பயணித்து இருந்தால் அவர்களுக்கு நிச்சயமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கும் எனவும், அந்த நேரத்தில் சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் பாதசாரிகள் இருந்திருந்தால் ஓட்டுநரால் சரியான நேரத்தில் பிரேக் போட முடிந்திருக்காது எனவும் அங்கு ஒரு விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் எனவும் அவர் கிராப் நிறுவனத்திடம் கூறியுள்ளார்.