சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..??

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..??

சிங்கப்பூர்: ஜப்பானின் ஒக்கினாவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் 17 வயது இளம் பெண்ணை தொடர்ச்சியாக பலமுறை மானபங்கம் செய்ததற்காக இந்தோனேசிய இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

20 வயதான ஆரியல் லுத்ஃபியான் முவாரிஃபின் தன் மீதான மானபங்க குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒக்கினாவாவில் கட்டுமானத் தொழிலாளராக பணிபுரிந்து வந்த ஆரியல், கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வழியாக செல்லும் விமானத்தில் தனது சொந்த நாட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

தாய்லாந்து நாட்டில் வசிக்கும் 17 வயதுடைய பெண் அதே விமானத்தில் சிங்கப்பூர் வழியாக தமது சொந்த நாட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். விமானத்தில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

பயணத்தின் போது அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்ததை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆர்யல் அப்பெண்ணின் உடம்பில் பல பகுதிகளில் தொட்டுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்து எழுந்த அப்பெண் அவரிடமிருந்து விலக முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த இளைஞர் அந்த பெண்ணின் முதுகில் கை வைத்து அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

அதனால்  இருக்கையில் இருந்து எழுந்த அப்பெண் விமான பணிப்பெண்ணிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். உடனே அவர் வேறொரு இருக்கைக்கு மாற்றப்பட்டார்.


விமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கியவுடன் அதே நாளில் ஆர்யல் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானத்தில் பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக அந்த இளைஞருக்கு 15 மாத சிறை தண்டனையும், 3 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK