மகனை போதைப்பொருள் பயன்படுத்த அனுமதித்த தாய்..!!4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

மகனை போதைப்பொருள் பயன்படுத்த அனுமதித்த தாய்..!!4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

சிங்கப்பூர்: தனது 15 வயதுடைய மகனை மெத் எனப்படும் போதைப்பொருளைப் பயன்படுத்த அனுமதித்த 52 வயது தாய்க்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது.

ஜூன் 5 ஆம் தேதி அன்று அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயரை வெளியிட அனுமதி கிடையாது.

போதைப்பொருள் கருவிகளுக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்தியது, உட்கொண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய 2 குற்றசாட்டுகள் அந்த பெண்மணி மீது சுமத்தப்பட்டது. அந்தப் பெண்ணும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


குற்றவாளியாகிய அந்த பெண் ஈசூனில் தனது கணவருடனும் மகனுடனும் வசித்து வந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது .

கடந்த 2022 ஆம் ஆண்டு அந்தப் பெண் மெத் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு அந்தப் பெண் மகனை விட்டு சென்ற பிறகு, அவர் பயன்படுத்தியக் கருவிகளைக் கண்ட 15 வயது சிறுவன் மெத் புகைக்க பழக்கமாகியுள்ளார்.

மத்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு தாயை சென்ற ஆண்டு (2025) ஜூன் மாதம் 23ஆம் தேதி கைது செய்தது. தற்போது அந்த தாய்க்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK