சிங்கப்பூரில் பேருந்து சேவையில் முக்கிய மாற்றம்..!! அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) வழங்கிய ‘டம்பைன்ஸ் பேருந்துத் தொகுப்பு’ திட்டத்தின் கீழ், வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் கோ- அஹெட்(Go- Ahead) பேருந்து நிறுவனம் இப் பேருந்து வழித்தடங்களை SBS டிரான்சிட் நிறுவனத்திடமிருந்து முறைப்படி பொறுப்பேற்க உள்ளது.
பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக இந்த மாற்றம் 2 கட்டங்களாக (Tranches) பிரிக்கப்பட்டு பேருந்து சேவைகள் தடையின்றி வழங்கப்பட உள்ளது.
👉முதல் கட்டம்: (ஜூலை 5, 2026 இல் இருந்து மொத்தம் 14 பேருந்து சேவைகள் கோ- அஹெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும். அந்த பேருந்து எண்கள்: 10,10e,18,20,31,39,65,129,292,293,298,299,454 மற்றும் 646.
👉இரண்டாம் கட்டம்: ஜூலை 19, 2026 முதல் எஞ்சியுள்ள 15 பேருந்து சேவைகள் இம்மாற்றத்தில் இணைய உள்ளது. அந்தப் பேருந்து எண்கள்: 4,19,23,28,29,37,38,47,69,72,81,127,291,296 மற்றும் 469.
இந்த காலகட்டத்தில், சம்பந்தப்பட்ட பேருந்து வழித்தடங்களும் கட்டணங்களும் எந்த ஒரு மாற்றமும் இன்றி இருக்கும் என Go-Ahead நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சேவைகள் டம்பைன்ஸ் பேருந்து நிலையம், டம்பைன்ஸ் கான்கோர்ஸ் பேருந்து நிலையம், டம்பைன்ஸ் நார்த் நிலையம் மற்றும் சாங்கி பிசினஸ் பார்க் பேருந்து நிலையம் ஆகிய நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
இப்பேருந்துகள் அனைத்தும் புதிய ஈஸ்ட் போஸ்ட் ஒருங்கிணைந்த நிலையத்திலிருந்து இயக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த வழித்தடங்களில் பெரிய அளவில் மின்சாரப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வருவதை உறுதி செய்வதற்கும், ஒரே நேரத்தில் பல பேருந்துகள் கூட்டமாக வருவதை தவிர்ப்பதற்கும் Al தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளது.