சிங்கப்பூரில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..! SBS Transit ஊழியர்கள் அசத்தல்..!

சிங்கப்பூரில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..! SBS Transit ஊழியர்கள் அசத்தல்..!

சிங்கப்பூரில் SBS Transit பேருந்து ஊழியர்கள் ஒன்றிணைந்து, பயணி ஒருவர் பேருந்தில் தவறவிட்ட NT$20,000 (S$833) ரொக்க பணத்தை பத்திரமாக மீட்டெடுத்து கொடுத்துள்ளனர்.

அந்நிய நாட்டுப் பணத்தை மீட்டெடுக்க ஊழியர்கள் காட்டிய நேர்மையும் கூட்டு முயற்சியும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தைவானைச் சேர்ந்த பயணி ஒருவர், சிங்கப்பூரில் SBS டிரான்ஸ்சிட் பேருந்து ஒன்றில் பயணம் செய்த போது தனது பணப்பையை தவற விட்டுள்ளார். அதில் NT$20,000 ரொக்கப் பணம் இருந்துள்ளது.

பணப்பை தொலைந்தது குறித்து பேருந்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக பணத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

பேருந்து ஓட்டு Mர் மற்றும் ஆங் மோ கியோ பேருந்து நிலையத்தில் மற்ற ஊழியர்கள் ஒன்றிணைந்து, அந்த பேருந்தை தீவிரமாக தேடி பணப்பை மற்றும் ரொக்கப் பணத்தை பத்திரமாக மீட்டெடுத்தனர்.

 

மீட்டெடுத்த பணம் பத்திரமாக அந்த தைவான் நாட்டைச் சேர்ந்த பயணியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊழியர்களின் நேர்மையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அந்தப் பயணி ஊழியர்கள் எவ்வளவு விரைவாக அதை கையாண்டு எனது காகிதப்பையைக் கண்டுபிடித்தார்கள் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எனவும், அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

SBS Transit நிறுவனம் தனது ஊழியர்களின் இந்த சிறந்த சேவை மற்றும் நேர்மையைப் பாராட்டும் விதமாக இந்த செய்தியை சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளது.