சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் பரபரப்பு.! கான்கிரீட் தடுப்பில் மோதி கவிழ்ந்த லாரி!
சிங்கப்பூர்: சறுக்கியதாக கருதப்படும் ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்தா கான்கிரீட் தடுப்பு வேலையில் மோதி, இறுதியில் உட்லண்ட்ஸ் அவென்யூ 7- ல் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் ஆனது SGRV-யின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த காணொளியில் ஒரு வளைவில் இந்த விபத்து நிகழ்ந்ததையும் அதில் ஒரு டயர் தரையில் இருந்து விலகிய நிலையில் ஒரு வெள்ளை மினி வேன் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிகிறது.
நேற்று (ஜூலை 24) இரவு சுமார் 10:05 மணி அளவில் உட்லண்ட்ஸ் அவன்யூ 7ல் இருந்து செம்பவாங் நெடுஞ்சாலை மற்றும் கம்போங் சாலை செல்லும் சந்திப்பில் ஒரு சாலை விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினருக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
விபத்தில் வாகனத்தின் முன்பகுதி கணிசமாக சேதம் அடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் பெரிய அளவில் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்பது தெரிகிறது.
லாரி ஓட்டுநரான 28 வயது நபர் லேசான காயங்கள் ஏற்பட்ட போதிலும், அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார். தற்போது அவர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.
உட்லண்ட்ஸ் பகுதியில் சமீபகாலமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.