இன்ஃப்ளூயன்சரை ஏமாற்றிய பெண்!! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

இன்ஃப்ளூயன்சரை ஏமாற்றிய பெண்!! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரை சேர்ந்த பிரபல சமூக ஊடகக் கணக்கான ‘OneRicePlease’ இன் இன்ஃப்ளூயன்சர், மொபைல் காபி ஸ்டால் கூட்டு வணிகத்திற்காக $50,000 முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

ஏமாற்றிய பெண் உணவக உரிமையாளர், அந்த $50,000 அசல் தொகையை வட்டியுடன் சேர்த்து இன்ஃப்ளூயன்சருக்குத் திருப்பித் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘OneRiceplease’ என்ற கணக்கை நடத்தும் இன்ஃப்ளூயன்சர், ‘Waga Waga’ என்ற பிராண்டின் கீழ் மொபைல் காபி வணிகத்தைத் தொடங்குவதற்காக ஒரு பெண் உணவக உரிமையாளருடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டார்.

இந்தத் திட்டம் 25% பங்குகளைப் பெறுவதற்காக இன்ஃப்ளூயன்சர் $50,000 முதலீடு செய்தார். தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகக் கூறி அந்தப் பெண், பணத்தை விரைவாக சப்ளையர்களுக்குச் செலுத்த வேண்டும் எனக் கூறி, இன்ஃப்ளூயன்சரின் முதலீட்டுத் தொகையைத் தனது தனிப்பட்டு வங்கிக் கணக்கிற்கு மாற்ற வைத்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, அந்தப் பெண் புதிய கூட்டு வணிகத்திற்காக நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யவில்லை.

மேலும் இன்ஃப்ளூசருக்குப் பேசப்பட்ட 25% பங்குகளையும் அவர் வழங்கவில்லை. இதனால் தனது முதலீடு முழுவதும் வீணாகிவிட்டதை உணர்ந்த இன்ஃப்ளுயன்சர், அந்தப் பெண் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நீதிமன்ற விசாரணையில், அந்த இன்ஃப்ளூயன்சர் கொடுத்த $50,000 தொகையையும் கூட்டு வணிகத்திற்காக ஆரம்பக் கட்ட ஏற்பாடுகள் மற்றும் சப்ளையர்களுக்கு வழங்குவதற்காகவே முழுமையாகச் செலவிட்டதாகக் கூறியுள்ளார்.

அதற்கு ஆதாரமாக மொத்தம் $50,000 மதிப்பிலான சில ரசீதுகள் மற்றும் இன்வாய்ஸ்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அந்தப் பெண் சமர்ப்பித்த பெரும்பாலான ரசீதுகள் அவர் குறிப்பிட்ட வணிகச் செலவுகளுடன் ஒத்துப்போகவில்லை எனவும், அந்தப் பணம் யாரால் செலுத்தப்பட்டது என்பதற்கான தெளிவான பதிவுகளோ, அல்லது அவை இன்ஃப்ளூயன்சர் கொடுத்த $50,000 தொகையிலிருந்துதான் செலவழிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

நிறுவனத்தின் கணக்கு முடக்கப்பட்ட விபரங்களை இன்ஃப்ளூயன்சருக்கு அவர் முன்கூட்டியே முறைப்படி தெரிவிக்கவில்லை. இதனால், அந்தப் இன்ஃப்ளூ யன்சரின் பணத்திலிருந்து சட்டவிரோதமாக லாபம் ஈட்டி உள்ளார் என்று நீதிபதி உறுதி செய்தார்.

இன்ஃப்ளூயன்சரின் முதலீடு முழுமையாக ஏமாற்றப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்த சிங்கப்பூர் நீதிமன்றம், அந்தப் பெண் பெற்றுக் கொண்ட $50,000 தொகையை, இடைப்பட்ட காலத்திற்கான வட்டியுடன் சேர்த்து உடனடியாக இன்ஃப்ளூயன்சருக்குத் திருப்பித் தர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.