விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!!

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!!

சிங்கப்பூரில் பல பூனைகளைத் துன்புறுத்தி அவற்றை கத்தியால் குத்தியக் குற்றத்திற்காக ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு HDB கட்டிடத்தின் 34 வது மாடியில் இருந்து பல பூனைகளைக் கீழே வீசியது உட்பட, அவற்றைக் கொடூரமாக துன்புறுத்திய குற்றத்திற்காகவும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

துன்புறுத்தலில் பூனைகளில் இரண்டு இறந்துள்ளன. விலங்குகள் மீதான கொடுமை வழக்குகளில் இதுவரை வழங்கப்பட்ட தண்டனைகளிலேயே இதுவே மிகவும் கடுமையான தண்டனையாகும்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட டான் யி பின் ரியான் 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார். பின்பு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட உள்ளார். ஜாமினில் இருந்த பொழுதும் அவர் திரும்பவும் அதே குற்றத்தை செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பூனைகளைக் கொடுமைப்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் இல் , குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது காதலியுடன் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தெரு பூனைகளுடன் விளையாடத் தொடங்கியுள்ளார். ஆனால் அந்தப் பூனைகள் அவரைப் புறக்கணித்துவிட்டு, கீறி உள்ளன. அதனால் கோபமடைந்தவர் பூனைகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளாார்..

கடந்த மார்ச் மாதம், பூனை ஒன்று இரத்தப்போக்குடன் கண்டெடுக்கப்பட்டதாக தேசிய பூங்காக்கள் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பூனையை வாலைப் பிடித்து இழுத்தது, தலையை சுவரில் மோதுவது மற்றும் தரையில் தூக்கி எறிவது போன்ற கொடுமைகளைச் செய்த காட்சிகள் cctv-யில் பதிவாகி இருந்தது.

காயமடைந்த பூனை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டபோது, அதன் காயங்களின் தீவிரங்கள் காரணமாக அது கருணைக் கொலை செய்யப்பட்டது.

அந்த நபர் 2025 மார்ச் 13 அன்று விலங்குகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 31 வார சிறைத் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK