போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அருகே காரில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது தவறான திசையில் ஒரு சைக்கிள் ஓட்டுநர் தீரென வந்துள்ளார். அப்போது அவர் தனது வலது காலை நீட்டியுள்ளார். இதனைக் கண்ட அந்த கார் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த சம்பவமானது அந்தக் காரின் டாஷ்கேம்-இல் பதிவாகி இருந்தது. அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி இணையவாசிகளிடையே சூடான விவாதங்களைத் தூண்டி உள்ளது.
மே 23ஆம் தேதி அன்று மாலை 5:14 மணியளவில் F2 வாகன நிறுத்திமிடத்ற்கு அருகே உள்ள கிழக்கு கடற்கரை பூங்கா சேவை சாலையில் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்த காணொளியை SGRV ADMIN என்ற முகநூல் பக்கத்தில் திடீரென தன்னை நோக்கி ஒரு மிதிவண்டி வருவதைக் கண்டதாக கார் ஓட்டுநர் பதிவிட்டுள்ளார்.
கார் ஓட்டுநர் சைக்கிள் ஓட்டுநரை கண்டதும் அவர் கடந்து செல்ல விடுவதற்காக சற்று இடதுபுறமாக நகர்ந்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த சைக்கிள் ஓட்டுநர் திடீரென அவரது வலது காலை நீட்டி தள்ளாடியபடி காருக்கு முன்னால் சென்றுள்ளார்.
மேலும் அந்த காணொளியில் நான் மிதிவண்டி ஓட்டுநர் வருவதை கவனிக்கவில்லை; நான் வழி விட வேண்டும் என்பதற்காக அவர் தோன்றிய உடனே ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். ஆனால் யாராவது என்னை நோக்கி சைக்கிள் ஓட்டி வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை எனவும் கார் ஓட்டுநர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
கிழக்குக் கடற்கரை பூங்கா அணுகுசாலையின் இந்த பகுதி ஒருவழிப் பாதையாக உள்ளது. மிதிவண்டி ஓட்டுநர் போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தானது எனவும், அது விபத்துக்கு வழிவகுக்க கூடும் எனவும் பல இணையவாசிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வாகன ஓட்டிகள் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டுமெனவும் சில இணையவாசிகள் கூறியுள்ளனர். அந்த சைக்கிள் ஓட்டுநரின் செயலானது முற்றிலும் நியாயமற்ற ஒன்று எனவும் சில இணையவாசிகள் கருதுகின்றனர். சைக்கிளைப் பார்த்த பிறகு கார் ஓட்டுநர் இடம் அளிப்பதற்காக இடது புறமாக நகர்வதும் அந்த காணொளியில் தெரிகிறது.
அந்தக் கார் மிகவும் வலது புறமாக சென்றதால் மிதிவண்டி ஓட்டுநர் மீது மோதிவிடுமோ என்ற பயம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனவும் மேலும் சில இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமுறைகளின் படி, போக்குவரத்து விதிக்கு எதிராக செல்லும் போக்குவரத்து சமிக்ஞைகளை மீறும் அல்லது மற்றவர்களின் பாதுகாப்பைப் புறக்கணிக்கும் மிதிவண்டி ஓட்டுநர்கள் சட்டத்தை மீறக்கூடும்.
இந்த குற்றத்தை முதல் முறை செய்பவர்களுக்கு $1,000 வரை அபராதமும், 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.