போலி ஏஜென்ட்டுகளிடம் சிக்காதீர்கள்..! சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களையும், அங்கு பணிபுரிபவர்களையும் இலக்காகக் கொண்டு நடைபெறும் வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. குறிப்பாக, தனிநபர்கள் தங்களை ஏஜென்ட் என்று கூறிக்கொண்டு பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர்கள் ஏஜென்ட் தொழில் செய்யலாமா?: சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் (Work Permit), எஸ் பாஸ் (S Pass) அல்லது இ-பாஸ் (E Pass) ஆகியவற்றில் பணிபுரிபவர்கள், தங்களது அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.
பகுதிநேர வேலைத் தடை: பகுதிநேர (Part-time) வேலைகளையோ அல்லது சட்டத்திற்குப் புறம்பான ஏஜென்ட் தொழிலையோ செய்ய சிங்கப்பூர் சட்டத்தில் அனுமதியில்லை.
சட்ட நடவடிக்கை: விதியை மீறி ஏஜென்ட் தொழில் அல்லது பகுதிநேர வேலைகளில் ஈடுபடுபவர்கள் மீது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதில் அபராதம், கைது நடவடிக்கை அல்லது சிங்கப்பூரை விட்டு வெளியேற்றி மீண்டும் வர முடியாதவாறு ‘பிளாக்லிஸ்ட்’ (Blacklist) செய்யப்படுதல் போன்றவை அடங்கும்.
போலி ஏஜென்ட் மோசடிகள் இயங்கும் முறை: சமீபகாலமாக டெலிகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பல மோசடிகள் நடைபெறுகின்றன:
அடையாளத் திருட்டு: போலி ஏஜென்ட்டுகள், சிங்கப்பூரில் பணிபுரியும் நபர்களின் ஒர்க் பெர்மிட் கார்டு மற்றும் புகைப்படங்களை முறைகேடாகப் பெற்று, தங்களது அடையாளமாகப் பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணம் பறிக்கின்றனர்.
சிம் கார்டு மோசடி: பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் வாங்கியது மட்டுமின்றி, அவர்கள் பெயரிலேயே சிம் கார்டு வாங்கித் தருமாறு வற்புறுத்தி சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.
பண இழப்பு: ஆயிரக்கணக்கான டாலர்களைப் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தராமலும் பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றுகின்றனர்.
இத்தகைய தொடர்ச்சியான தொடர்புகள், இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே நம்பிக்கை, ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பு சூழல் தொடர்ந்து மாறிவரும் நிலையில், அண்டை நாடுகளான சிங்கப்பூரும் மலேசியாவும் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் யார் சட்டப்பூர்வமாக ஏஜென்ட் தொழில் செய்ய முடியும்?
உரிமம் பெற்றவர்கள்: சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் (PR) அல்லது குடிமக்கள் (Citizens) உரிய தேர்வு எழுதி, சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் (MOM) அங்கீகரிக்கப்பட்ட உரிமம் (License) வைத்திருந்தால் மட்டுமே ஏஜென்சி தொழில் செய்ய முடியும்.
MOM இணையதளத்தைச் சரிபார்த்தல்: அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஏஜென்சிகளின் முகவரி மற்றும் உரிம எண்கள் MOM-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள விதிகள்: இந்தியாவிலும் ‘RA License’ (Registered Agent License – 1000+ / 100+ License) வைத்திருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு ஏஜென்சி நடத்த சட்டப்பூர்வ அனுமதி உண்டு.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
தனிப்பட்ட நபர்கள் அல்லது ஒர்க் பெர்மிட்டில் இருப்பவர்கள் “வேலை வாங்கித் தருகிறேன்” என்று பணம் கேட்டால் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டாம்.
ஏஜென்சி மூலம் வேலை தேடுகிறீர்கள் என்றால், MOM இணையதளத்தில் அவர்களின் உரிமத்தைச் சரிபார்க்கவும். முன்முறை அறிமுகம் இல்லாத நபர்களுக்காக உங்களது அடையாள ஆவணங்களையோ அல்லது உங்களது பெயரில் சிம் கார்டுகளையோ வாங்கிக் கொடுக்க வேண்டாம்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
