சிங்கப்பூரில் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை அதிகரிக்கும்..!! அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை அதிகரிக்கும்..!! அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் எரிசக்தி மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கும் என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான திரு கா சண்முகம் அவர்கள் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

தற்பொழுது நிலவும் அசாதாரண சூழலின் தாக்கத்தால் எண்ணெய், எரிசக்தி மற்றும் மின்சாரம் போன்றவைகளின் விலைகள் அதிகரிக்க போவதாக அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் எரிசக்தி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக செயல்படுவது, எண்ணெய் மற்றும் எரிசக்தி மீள்திறன்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகவும், இதுவரை கச்சா எண்ணெய் கிடைப்பதில் எந்த தடையும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிசக்தியின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட வரும் நிலையில், இந்த சூழ்நிலை எதுவரை நீடிக்கும் என்று தெரியாத காரணத்தினால் அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாற்று வழிகளில் எண்ணெய் கிடைப்பதாகவும் அதற்கு கூடுதல் விலைக் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார்.

எரிவாயுகளின் விலை ஏற்றங்களை சிங்கப்பூரர்கள் எதிர்கொண்டு வருவதாகவும், இன்னும் விலையேற்றங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய விநியோக சங்கிலியில் ஏற்படும் தடைகள் சிங்கப்பூர் பொருளியலிலும், அத்தியாவசிய தேவைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும், அதில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

மின்சார விநியோகத்தில் எந்த ஒரு தடையும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சிங்கப்பூரின் மின்சார தேவைகள் பல வழிகளில் பூர்த்தி செய்யப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

95% மின்சாரம் இயற்கை எரிவாயிலிருந்து பெறப்படுவதாகவும், அது டீசலாக மாற்றப்படும் வழி இருப்பதாகவும், அதற்கேற்ப எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் திரு சண்முகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK