சாங்கி விமான நிலையத்தில் நடந்த நகைச்சுவை காட்சி..!! இணையத்தில் வைரல்..!!
சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் ஒரு வேடிக்கையான காட்சி அரங்கேறியுள்ளது. அந்த காட்சியானது இணையத்தில் வைரல் ஆகி இணையவாசிகளின் கேலிகளைப் பெற்றுள்ளது.
விமான நிலையத்தில் இரண்டு சக்கர நாற்காலி ரோபோக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு, “மன்னிக்கவும் தயவுசெய்து ஒதுங்கி செல்லுங்கள்” என்று மீண்டும் மீண்டும் கூறி வழிவிட மறுத்தபோது இந்த வேடிக்கை காட்சி நடந்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 15) ரிஷிபுத்திரானி (இணையவாசி) ஒரு வீடியோவை அவரது instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சாங்கி விமான நிலையத்தில் டெர்மினல் – 3 இல் உள்ள ஒரு அகலமான சாலையில் 2 சக்கர நாற்காலி ரோபோக்கள் சந்திப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.
2 சக்கர நாற்காலி ரோபோக்களும் நின்று மற்றொன்றை வழிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளன. இந்த சம்பவம் ஆனது சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்துள்ளது. இறுதியில் சக்கர நாற்காலி ரோபோக்களில் ஒன்று பின்வாங்கி அங்கிருந்து செல்ல முடிவு செய்துள்ளது.
இந்த காணொளியைப் பகிர்ந்த இணையவாசி சிங்கப்பூர் சட்ட அமைச்சகத்தால் நடத்தப்படும் முதல் சிங்கப்பூர் சட்ட தின நிகழ்வை தொகுத்து வழங்குவதற்காக லண்டன் சென்று கொண்டிருந்தபோது இந்தக் காட்சியைக் கண்டுள்ளார்.
சமூக சமரச மையங்கள் மூலம் சமரசப் பணிகளை நிதி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தபோது, ரோபோக்களுக்கு இடையே ஒரு சமரசம் ஏற்படும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என அந்த காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.