கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்து..!! சோவா சூ காங் பகுதியில் பரபரப்பு..!!
சிங்கப்பூரில் ஓட்டுநரின் கவனக்குறைவால் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது சோவா சூ காங் பகுதியில் பகுதியில் ஏப்ரல் 29ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளது.
இரண்டு கார்கள் மற்றும் ஒரு மிதிவண்டி சம்பந்தப்பட்ட இந்த சாலை விபத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. இந்த விபத்தில் 77 வயதான மிதிவண்டி ஓட்டுநர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
டிக் டாக்கில் the.irta என்ற பயனர் ஒருவர் ஏப்ரல் 29ஆம் தேதி அன்று விபத்துக் குறித்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் சந்திப்புக்கு அருகில் ஒரு மிதிவண்டி அதன் பக்கவாட்டில் கவழ்ந்து கிடப்பதும், அருகில் குறைந்தது 2 போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இருப்பதும் தெரிகிறது.
வலது புறம் திரும்பும் பாதை விபத்து காரணமாக போக்குவரத்து கூம்புகளால் இந்த தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதும், சம்பவ இடத்தில் கூட்டம் குடியிருப்பதும் அந்த புகைப்படங்களில் காண முடிகிறது.
நிலப் போக்குவரத்து ஆணையமும் விபத்து நிகழ்ந்த தினத்தன்று தனது சமூக ஊடக தளமான X -ல் , சோவா சூ காங் தெரு 62 – க்கு அருகில், சோவா சூ காங் வடக்கு அவென்யூ 6-ல் இருந்து சோவா சூ காங் டிரைவ் நோக்கி செல்லும் வழியில் ஒரு சாலை விபத்து நிகழ்ந்துள்ளதாக பதிவிட்டிருந்தது.
மேலும் அந்த பதிவில் ஓட்டுநர்கள் 3-வது பாதையை தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
இது குறித்த காவல்துறையினர் கூறியதாவது: விபத்தில் 77 வயதான ஆண் மிதிவண்டி ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய கார் ஓட்டுநரை (50 வயது) கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்த விசாரணையானது நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.