அங் மோ கியோவில் சாலை விபத்து..!!

அங் மோ கியோவில் சாலை விபத்து..!!

சிங்கப்பூர் : அங் மோ கியோவில் நேற்று (ஏப்ரல் 10) நள்ளிரவுக்குப் பின் சாலை விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தானது 12:20 மணியளவில் புவாங்கோக் கிரீன் மற்றும் இயோ சூ ஹாங் சாலை சந்திப்பில் நடந்துள்ளது.

அந்த விபத்தில் மஞ்சள் நிற டாக்ஸி ஒன்று போக்குவரத்து விளக்குக் கம்பம் ஒன்றின் நடுவே உள்ள தடுப்புகளில் மோதியுள்ளது.

டாக்ஸி மோதியதில் அந்த தடுப்பு விளக்குகள் சில சேதம் அடைந்துள்ளன.

சாலை விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் விரைந்து வந்தனர்.

விபத்தில் 60 வயது டாக்ஸி ஓட்டுனர் உட்பட 4 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த பயணிகளைத் தற்காப்புப் படையினர் சிகிச்சைக்காக 2 மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.

காயமடைந்தவர்களின் வயது 4 வயது முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்கும் என்று குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்த விசாரணைக்கு டாக்ஸி ஓட்டுநர் உதவி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK