சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் மின்னணு சிகரெட் பயன்படுத்தியதாக வதந்தி!! உண்மையில் நடந்தது என்ன??

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் மின்னணு சிகரெட் பயன்படுத்தியதாக வதந்தி!! உண்மையில் நடந்தது என்ன??

சிங்கப்பூரில் உள்ள தாஷி தொடக்கப் பள்ளி (Dazhi Primary School) மாணவர்கள் மின்னணு சிகரெட்டுகளை (E-Cigarette) பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

thesgdaily என்ற சமூக ஊடகப் பக்கத்தில் ஜூலை 21ஆம் தேதி அன்று இச்சம்பவம் குறித்த காணொளிகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது வுட்லீ லிங்கில் உள்ள பிளாக் 206D-யின் தரைத்தளத்தில் நடந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த காணொளியில் வெளிர் நீல நிற மேலாடை அணிந்த ஒரு பெண் மின்னணு சிகரெட் புகைப்பது போல தோன்றுவது, உட்பட 4 பதின்வயதினர் இருப்பது தெரிகிறது.

அடர் நீல நிற மேலாடை அணிந்த மற்றொரு சிறுவன் தீ மூட்டுவது போலவும் அந்த காணொளியில் தெரிகிறது. ஆனால் அவன் என்ன செய்கிறான் என்பது அதில் தெளிவாக தெரியவில்லை.

சில இணையவாசிகள் அந்த காணொளியில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண்ணின் வெளிர் நீல நிற மேலாடை தாஷி தொடக்கப் பள்ளியின் சீருடையாக இருக்கலாம் என்று அதில் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான உண்மை நிலையை கண்டறிவதற்காக அதிகாரிகள் தேவையான தகவல்களை சேகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு பள்ளி நிர்வாகம் முக்கியத்துவம் அளிப்பதாகவும், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.