சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!!
சிங்கப்பூரில் பாசிர் ரிஸ்ஸில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த போது பச்சை விளக்குகாக காத்திருக்காமல், சாலையைக் கடந்த போது எதிரே வந்த கார் ஒன்று மோதவிருந்தது. அதிலிருந்து அந்த மாணவி நூலிழையில் உயிர்த் தப்பி உள்ளார்.
பதற வைக்கும் இந்த சம்பவமானது இணையத்தில் பரவி வருகிறது. இணையவாசிகள் மத்தியில் இந்த காணொளி ஆனது சூடான விவாதத்தைத் தூண்டி உள்ளது.
ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று SGRV என்ற Facebook பக்கத்தில் இந்த காணொளியானது பதிவேற்றப்பட்டிருந்தது. அன்று பிற்பகல் சுமார் 2:30 மணி அளவில் பாசிர் ரிஸ்ஸில் 6-வது அவென்யூ, எண் 9 ஹை சிங் கத்தோலிக்கப் பள்ளிக்கு அருகே இந்த சம்பவமானது அரங்கேறி உள்ளது.
ஹை சிங் கத்தோலிக்கப் பள்ளியின் சீருடை அணிந்து, பள்ளிப் பையைச் சுமந்த பள்ளி மாணவி, சிவப்பு விளக்கை மீறி நேராக சென்றதால் அங்கு ஒரு சாலை விபத்து ஏற்படவிருந்தது. ஆனால் அந்த மாணவி அந்த விபத்தில் இருந்த உயிர் தப்பிய சம்பவம் ஆனது இணையவாசிகளிடையே ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் போக்குவரத்து விளக்கு பச்சையாக இருந்ததும் அந்த காணொளியில் தெரிகிறது. நேராக சென்று கொண்டிருந்த கார் சாலையைக் கடக்கும் பொழுது அந்த மாணவி திடீரென குறுக்கே சென்றுள்ளார். அதைக் கவனித்த அந்த கார் ஓட்டுநர் உடனடியாக பிரேக்கை அழுத்தி காரை வெற்றிகரமாக நிறுத்தி விபத்தைத் தடுத்துள்ளார்.
மாணவியின் இந்த ஆபத்தான செயல் ஆனது அவ்வழியே சென்றவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது. அதே இடத்தில் 2 மாணவர்களும் நிலைமையை சரி பார்ப்பதற்காக நின்று இருப்பதும் அந்த காணொளியில் தெரிகிறது.
இந்த காணொளியைப் பார்த்தை பல இணையவாசிகள் அந்தச் சிறுமியின் பொறுப்பற்ற இந்த செயலைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் பள்ளிகளும், பெற்றோர்களும் இது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் சில இணையவாசிகள் ஓட்டுநர் கவனமாக இருந்து விரைவாக செயல்பட்டதற்கு அவரைப் பாராட்டி உள்ளனர். இருப்பினும் மற்றவர்கள் பள்ளிக்கு அருகே ஓட்டுநர்கள் வேகத்தை சற்று குறைத்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஹை சிங் கத்தோலிக்க மேல்நிலைப்பள்ளி கூறியதாவது: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தங்களின் முதன்மையான முன்னுரிமை எனவும், போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்கவும் பொறுப்புடன் சாலையைப் பயன்படுத்தவும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.