செலேட்டர் விரைவுச் சாலையில் பரபரப்பு..!! சாலையின் நடுவே நடந்த அடுத்தடுத்த விபத்து..!!
சிங்கப்பூர் : செலேட்டர் விரைவுச் சாலையில் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையின் நடுவே அடுத்தடுத்த விபத்துக்கள் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டாக்ஸியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. அதன் பிறகு மோட்டார் சைக்கிளுக்கு பின் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 10 – ஆம் தேதி அன்று காலை 7:25 மணியளவில், அப்பர் தாம்சன் சாலை வெளியேறி செல்லும் வழியில், புக்கிட் திமா விரைவுச் சாலையை நோக்கி செல்லும் செலேட்டர் விரைவுச் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்த காணொளி SGRV என்ற சமூக ஊடகப் பக்கமானது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது. அதில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி மீது மோட்டார் சைக்கிள் திடீரென பின்னால் மோதியதும், அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளும் அதை ஓட்டியவரும் இரண்டு வழித்தடங்களுக்கு நடுவே விழுந்ததும் தெரிகிறது.
மேலும் எதிர்பாதையில் வந்த இரண்டாவது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் இந்த மோதலை தவிர்க்க முடியாமல் கீழே விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அந்த ஓட்டுநர் இருக்கையில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனால் இரண்டாவது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், மோட்டார் சைக்கிளும் காற்றில் தூக்கி வீசப்பட்டதும் காணொளியில் காண முடிகிறது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) இந்த சம்பவத்தை உறுதி செய்தனர். பின்னர் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.
ஒருவரை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும், மற்றொருவரை உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்ததாக SCDF தெரிவித்துள்ளது.
மற்றொரு நபருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒருவர் 26 வயதுடைய ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மற்றொருவர் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 25 பெண் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் விபத்து குறித்த விசாரணையைக் காவல்துறை மேற்கொண்டுள்ளது.