ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..??

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..??

கோலாலம்பூர் : மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) மாலை 6:00 மணி அளவில் அப்துல்லா ஹூக்கும் (Abdullah Hukum) LRT ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் ,தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தவறி விழுந்த பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தவறி விழுந்த பெண் ரயிலுக்கு அடியில் சிக்கி கொண்டுள்ளார். அவரை மீட்பதற்காக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு அப்பெண்ணை மீட்பு படையினர் காப்பாற்றினர். அவருக்கு கைகளிலும், முகத்திலும் காயங்கள் ஏற்பட்டிருந்தது.

ரயில் நிலையத்திலேயே அப்பெண்ணுக்கு மருத்துவ முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இது குறித்து காவல்துறை விசாரணை நடத்திய போது அந்தப் பெண் தவறி தண்டவாளத்தில் விழுந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தால் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவச இடைவெளி பேருந்து சேவை போன்ற மாற்று வசதிகள் வழங்கப்பட்டன.

பயணிகளுக்கு ஏற்பட்ட தாமதம் மற்றும் இடையூறுக்காக” Rapid Rail ” நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.