சிங்கப்பூரில் அதிரடி வாகன சோதனை!மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
சிங்கப்பூரில் தகுந்த உரிமங்கள் இன்றி மற்றும் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எதிராக பல அரசு அமைப்புகள் இணைந்து அண்மையில் ஒரு கூட்டு முறியடிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி உள்ளன.
சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை (TP), தேசிய சுற்றுப்புற வாரியம்(NEA), மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) ஆகியவை இணைந்து இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டன.
இந்த சோதனை அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டில் நடத்தப்பட்டது. அந்த வழியேச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸர்கள் மற்றும் கரியமில புகையை வெளியிட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக NEA அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டவிரோத வாகன மாற்றங்கள் மற்றும் விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய கூட்டு சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக நடத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.