சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..??

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..??

சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் போக்குவரத்து பகுதியில் திருடியதாக கூறப்படும் குற்றசாட்டின் பேரில் இந்தோனேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாங்கி விமான நிலையத்தின் டைமிங்ரியின் போக்குவரத்து பகுதியில் உள்ள ஷால்லா டியூட்டி ஃப்ரீ கடையிலிருந்து, சுமார் S$736 மதிப்புள்ள 2 சரும பராமரிப்புப் பொருட்களை அப்பெண் திருடி உள்ளதாக கடந்த மாதம் (மே) 31ஆம் தேதி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அந்த கடையில் திருட்டைத் தடுக்கும் பொறுப்பிலிருந்த கடை ஊழியர்கள், ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொள்வதை கவனித்து திருட்டைக் கண்டுபிடித்து உள்ளனர்.

அந்தப் பெண் எந்த ஒரு பொருளையும் வாங்காமல் பியூட்டி ஃப்ரீ கடையை விட்டு வெளியேறுவது போன்ற காட்சிகளும் கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அதன் பிறகு கடையிலிருந்து சில பொருட்கள் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டு, காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் இதில் சம்பந்தப்பட்ட 40 வயது இந்தோனேசியப் பெண்ணை அடையாளம் கண்டனர்.

அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பே காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் திருடப்பட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அந்த பெண் பொருள்களை மறைத்து வைத்துவிட்டு பணம் செலுத்தாமல் டியூட்டி ஃப்ரீ கடையில் விட்டு வெளியேறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண் மீது இன்று (ஜூன் 11) நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட உள்ளது. அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK