உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் உட்லண்டஸ் சோதனைச் சாவடியில்  சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது,  பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் தப்பி ஓடியதால் தற்காலிகமாக சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது.

சோதனைச் சாவடி மூடப்பட்டு, அவசர கால நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. பின்பு, அந்த நபர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4) அன்று போத் செக்பாயிண்ட் என்ற முகநூல் பக்கத்தில் ஒரு இணையவாசி,  சோதனைச் சாவடியின் மோட்டார் சைக்கிள் பாதையில் ஒருவர் தப்பித்து ஓடுவதை பார்த்ததாகவும், அதனால் சோதனைச் சாவடி மூடப்பட்டு விட்டதாகவும் பதிவிட்டிருந்தார்.

குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம்(ICA) ஜுன் 4-ஆம் தேதி காலை சுமார் 9:42 மணி அளவில் இச்சம்பவம் ஆனது நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது.


ICA சம்பவம் நடந்த நேரத்தில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த ஒரு துணைப் போலீஸ் அதிகாரி, மோட்டார் சைக்கிள் அறிவிப்புப் பாதையின் நுழைவு வாயிலுக்கு அருகில் அந்த நபர் போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக நடந்து செல்வதைக் கவனித்துள்ளார்.

அவர் வாகனத்தை நிறுத்தி அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரியிடம் தனது பண அட்டை தொலைந்து விட்டதாக கூறியுள்ளார்.இருப்பினும் அந்த அதிகாரி அவரது மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முயன்றபோது அந்த நபர் திடீரென திரும்பி மலேசியாவை நோக்கி தப்பி ஓடி சென்று உள்ளார்.

அவரை நிற்குமாறு அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்திய போதிலும் அந்த நபர் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்ததால், சோதனைச் சாவடியைத் தற்காலிகமாக அதிகாரிகள் மூடினர்.

சிறிது நேரத்திலேயே அந்த நபர் கைது செய்யப்பட்டு மேற்கட்ட விசாரணைக்காக ICA ஆணையத்தின் அமலாக்கக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அந்த நபரை விசாரித்ததில் அவருக்கு சிங்கப்பூருக்கு நுழையும் எண்ணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு இணங்க தவறியதாலும், அவர்களைத் தங்கள் கடமைகளை செய்வதை தடுத்ததாலும் அந்த நபருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ICA தெரிவித்துள்ளது.

அந்த நபர் ஜூன் 6-ம் தேதி அன்று நாடு கடத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மை ICA கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK