சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!!
சிங்கப்பூர் கட்டுமான தளங்களில் மரசாரக்கட்டுகளை (Timber Scaffolding) அதிகபட்சமாக 3 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற புதிய விதிமுறை 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
சிங்கப்பூர் மனித வள அமைச்சகம் (MOM) மற்றும் சிங்கப்பூர் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் (SCAL) இணைந்து இந்த புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன.
தற்போது மரச் சாரக்கட்டுகளை அதிகபட்சமாக 9 மாதங்கள் வரை மட்டும் பயன்படுத்த அனுமதி உள்ளது. அது 2027, ஜனவரி 1முதல் 3 மாதங்களாக குறைக்கப்பட உள்ளது.
கட்டுமான தmங்களில் வெல்டிங் போன்ற ‘வெப்ப வேலைகள்’ நடக்கும் போது நீண்ட நாட்கள் இருக்கும் காய்ந்த மரக்கட்டைகள் தீ விபத்தை ஏற்படுத்தி மிக வேகமாகப் பரவக்கூடும்.
கட்டிடங்களுக்கு வெளியே அமைக்கப்படும் சாரக்கட்டுகளைச் சுற்றி உள்ள பாதுகாப்பு வலைகளுக்கு (Scaffold Nettings) கடுமையான தீப் பாதுகாப்பு தரநிலைகளை (Fire-Retardant Standards) கொண்டு வருவதற்கும் சங்கம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.