சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இடத்தில் தனது கணினியை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைத்த தகவல்களை தனது நண்பருக்கு பகிர்ந்து கொண்ட காரணத்தால் போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிவசூரியா மணியம் கேசவல் என்னும் 29 வயதுடைய அந்த நபருக்கு நேற்று (ஜூலை 2) நீதிமன்றத்தில் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் குற்றம் புரியும்போது போக்குவரத்து விசாரணை காவல்துறையாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேடன் ஓங் யிங் ஷான், என்பவர் அவரது நண்பரின் மீது அப்போது காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. பின்பு தன்னை பற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்த பெண்ணுக்கு ஓங் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
நீதிமன்ற விசாரணைக்கு பிறகு கணினி முறையைத் தவறாகப் பயன்படுத்திய சிவசூரியா மீது சுமத்தப்பட்ட 4 குற்றசாட்டுகளும் அதிகாரத்துவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஓங் சட்ட விரோதமான முறையில் பிறரை பயமுறுத்தியதும் அதிகாரத்துவ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததும் அவர் மீது நிரூபிக்கப்பட்டது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பிறகு, ஓங் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி படகில் நாட்டை விட்டு வெளியேறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து வரும் ஜூலை 14ஆம் தேதி அன்று மறுபரிசீலனை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிவசூரியா 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. ஓங், சிவசூரியா இருவரும் 2019 ஆம் ஆண்டிலிருந்து நண்பர்கள் என்பதும் சிவசூரியாவின் வேலை பற்றி ஓங்கிற்கு தெரிந்திருந்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வாகன உரிமம் இன்றி ஓங் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்ததாக அவரின் காதலராக இருந்த பெண் அதிகாரியிடம் தெரிவித்திருந்தார். அந்த பெண் அளித்த தகவல்களைக் கொண்டு வேறு 2 போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் 2022 ஜூலை மாதம் 12ஆம் தேதி அன்று ஓங்கை பிடித்தனர்.
கணினி முறையைத் தவறாக பயன்படுத்தி சிவ சூரிய அந்த பெண்ணின் தனிப்பட்ட தகவல்களையும் அவர் அளித்த புகாரையும் மீட்டெடுத்து அதை ஓங்கிடம் தெரிவித்ததால், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.