புலாவ் உபின் அருகே அதிர்ச்சி..!!படகிலிருந்து விழுந்த படகோட்டி உயிரிழப்பு..!!

புலாவ் உபின் அருகே அதிர்ச்சி..!!படகிலிருந்து விழுந்த படகோட்டி உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் ஜூலை 1 அன்று புலாவ் உபின் தீவுக்கு அருகே சரக்குகளை இறக்கி கொண்டிருந்தபோது கடலில் விழுந்ததாக கூறப்படும் 70 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இறந்தவரான ஹுவாங் லைமிங் ஒரு படகூட்டியாக இருந்துள்ளார். மேலும் அவர் ஒரு ஒப்பந்ததாரரின் சார்பாக புலாவ் உபின் தீவுக்கு கட்டுமானப் பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தார்.

இறந்தவரான ஹுவாங் லைமிங் ஒரு படகூட்டியாக இருந்துள்ளார். மேலும் அவர் ஒரு ஒப்பந்ததாரரின் சார்பாக புலாவ் உபின் தீவுக்கு கட்டுமானப் பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தார்.

சரக்குகளை இறக்கி முடித்துவிட்டு படகின் முன்புறத்தில் நின்று கொண்டிருந்தபோது அவர் தனது நிலை தடுமாறி கடல் விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தண்ணீரில் இருந்த ஒரு பாறையில் அவரது தலையில் அடிபட்டு அதன் மூலம் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

91 லோயோங் வேயில் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு பிற்பகல் 2:00 மணி அளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினரும் (SCDF) தெரிவித்துள்ளனர்.

நீரில் இருந்து மீட்கப்பட்ட அந்த முதியவர் சிகிச்சைக்கா சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இறந்தவரின் இளைய சகோதரர்களில் ஒருவரான ஹுவாங் சம்பவ இடத்தில் இருந்த பணியாளர்களிடமிருந்து அழைப்பு வந்த பின்னரே இது குறித்து தான் அறிந்து கொண்டதாக கூறியுள்ளார்.

தனது சகோதரர் 10 ஆண்டுகளுக்கு மேலாக படகில் பயணிகளை ஏற்றிச் சென்று, சரக்குகளைக் கொண்டு சென்று பிழைத்து வருவதாகவும், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.