சிங்கப்பூரில் கேசினோவில் கள்ள S$100 நோட்டு..!!அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!!

சிங்கப்பூரில் கேசினோவில் கள்ள S$100 நோட்டு..!!அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!!

சிங்கப்பூர் ரூபாய் நோட்டுகளை கள்ளத்தனமாக அச்சிட்டு பயன்படுத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் சீனாவைச் சேர்ந்த 33 வயது ஆடவர் மற்றும் 25 வயது பெண் ஆகிய இருவர் மீது இன்று (ஆகஸ்ட் 26) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

காவல்துறைக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி அதிகாலை சுமார் 3.50 மணியளவில் Marina Bay Sands கேசினோவில் கள்ள S$100 நோட்டை மாற்ற முயன்றதாகத் தகவல் கிடைத்தது.

விசாரணையில், 33 வயதான அந்த ஆடவர் சுமார் S$150,000 பணத்தை கேசினோவின் cashier counter-ல் வழங்கி, அந்தத் தொகையை தனது கேசினோ கணக்கில் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. பணத்தை எண்ணியபோது, ஒரு S$100 நோட்டில் “COPY” என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருந்ததை cashier கண்டுபிடித்தார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் காவல்துறை அதிகாரிகள் அந்த ஆடவரை அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்கிருந்து ஒரு பெண் printer ஒன்றுடன் வெளியேறியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்தப் பெண்ணிடம் 121 கள்ள S$100 நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கள்ள நோட்டுகளைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் மை, காகிதம் மற்றும் paper cutter உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரும் சிங்கப்பூர் நாணய நோட்டுகளை கள்ளத்தனமாக தயாரிப்பதற்கான சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

கள்ள நோட்டுகளை தயாரிப்பது, வைத்திருப்பது அல்லது உண்மையான பணமாகப் பயன்படுத்துவது போன்ற செயல்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

கள்ள நோட்டு கிடைத்ததாகச் சந்தேகம் ஏற்பட்டால், அதை அதிகமாகக் கையாளாமல் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அந்த நோட்டை வழங்கிய நபரின் தோற்றம் மற்றும் விவரங்களை முடிந்தவரை நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கள்ளநோட்டுகள் தொடர்பான இந்தச் சம்பவம், பணப் பரிவர்த்தனைகளில் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.