இந்த பேருந்துச் சேவைகள் காலை 5:00 மணி முதல் காலை 8:30 மணி வரை இயங்கும் என பொது போக்குவரத்து நிறுவனமான SMRT மே 18ஆம் தேதி அறிவித்துள்ளது.
புதிய ரயில் நிலையங்கள், தண்டவாளங்களை இணைக்கும் பணிகள் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் விதமாக தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட், டவுன்டவுன் ரயில் பாதைகளின் சேவை நேரங்கள் சீரமைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே SMRT தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த இடைவழிப் பேருந்துச் சேவை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் மே 23ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது.
அதன்படி மே 22 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் ரயில் சேவைகள் வெள்ளிக்கிழமை இரவு 11:30 மணிக்கு முன்னதாகவே நிறைவடையும். சனிக்கிழமைகளில் காலை 08:30 மணிக்கு தாமதமாக தொடங்கும்.
இந்த பேருந்துச் சேவைகளுக்கான கட்டணங்கள் வழக்கமான ரயில் பயண கட்டண முறையைப் போலவே அமையும் எனவும் SMRT குறிப்பிட்டுள்ளது.
பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறும் இந்த இடைவழிப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்தும் போது கூடுதல் பயண நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.