ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!!
சிங்கப்பூர் : ஒரு பெண் பணம் எடுப்பதற்காக ATM இயந்திரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது PIN எண்ணை உள்ளீடு செய்த பிறகு இயந்திரம் அவரது வங்கி அட்டையை (ATM CARD)மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளது.
அவர் கேட்ட $8,000 தரவில்லை. அதனால் பதற்றம் அடைந்த அந்தப் பெண்மணி வங்கி கவுண்டருக்கு இதைப்பற்றி கேட்பதற்காக சென்று உள்ளார்.
இதற்கிடையில் அந்தப் பெண்ணுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த ஒருவர், அந்தப் பணம் தாமதமாக வந்ததைப் பார்த்து அதிர்ஷ்டம் என்று தவறாக நினைத்து அதை அவருக்கு சொந்தம் ஆக்கிக் கொண்டுள்ளார்.
இந்த குற்றத்திற்காக காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நரசிம்மலுவின் மகன் 40 வயதான சுரேஷ் டேவிட் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, (குற்றம் சாட்டப்பட்டவர்) 2 ஆண்டுகள், 1 மாதம் மற்றும் 2 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கும் பொழுது, பிறருடைய சொத்துக்களை நேர்மையற்ற முறையில் அபகரித்தல் மற்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் போன்ற 14 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அரசு தரப்பு 5 குற்றச்சாட்டுகளை விசாரித்து, மீதமுள்ள 9 குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
வழக்கு விவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அன்று குற்றம் சாட்டப்பட்டவர் செந்தோசாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பகுகுதி நேர பணியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
ஒரு நாள் விருந்தினர் ஒருவர் ஹோட்டலுக்கு வந்த பொழுது அது செக் – இன் நேரம் இல்லாத காரணத்தினால், மேலாளர் பார்த்துக்கொள்வதற்காக சிறிய பை ஒன்றை ஹோட்டல் வரவேற்பறையில் வைத்துவிட்டு சென்றுள்ளாார்.
வேலையை முடித்துவிட்டு புறப்படுவதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் அந்த சிறியப் பையை பார்த்து எளிதாக அதை திருடிவிட்டார். அதில் இருந்த கழுத்தணி, கைக்காப்பு மற்றும் $2,070 மதிப்புள்ள பொருட்களை திருடி அந்த நபர் எடுத்துக் கொண்டுள்ளார்.
இது குறித்த ஹோட்டலில் விசாரணை நடத்தப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டவரே இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. அவரை தொடர்பு கொண்ட போது அவர் அந்த சிறிய பையுடன் ஹோட்டலுக்கு திரும்பி வருவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.