ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் புதிய வட்டப் பாதை ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்கள் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்பாட்டு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரயில்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் – இந்த இரண்டு நிறங்களில் எது பொருத்தமாக இருக்கும் என்ற நீண்ட யோசனைக்கு பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆனது ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று (ஏப்ரல் 10) தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

புதிய ரயில்கள் ஆரஞ்சு நிற வெளிப்புற தோற்றத்தையும், ரயில்களின் உள்ளே பயணிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் வண்ணமயமாகவும் தோற்றமளிக்க உள்ளது.

ரயிலில் 3 புதிய வட்ட ரயில் பாதை நிலையங்களை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட வழித்தட வரைபடங்களும் இடம்பெற உள்ளன.

கெப்பல், கேண்டன்மெண்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய நிலையங்களை இந்த ஆண்டின் நடுப்ப்பகுதியில் திறக்க LTA திட்டமிட்டுள்ளது.

வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 13) முதல் இந்த ஆரஞ்சு நிற வட்டப் பாதை ரயில் சேவைகள் தொடங்கவுள்ளது.

ரயில்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டிருந்த 4 இடைநிறுத்தப் பேருந்துகள் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என்றும் LTA தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK