நேற்று (ஏப்ரல் 4) instagramல் இந்த விபத்து குறித்த காணொளி பதிவிடப்பட்டிருந்தது. அந்த காணொளியில் கனரக வாகனம் ஒன்றை இழுத்துச் செல்லும் இலுவை வண்டியானது, சாலையோரம் செல்லும் பொழுது ஒரு சரிவில் கவிழ்ந்துள்ளது.
அந்த இலுவை வண்டி இழுத்து செல்லப்பட்ட கனரக வாகனமும் தடம் புரண்டுள்ளது. கனரக வாகனம் கவிழ்ந்து சாலையின் ஒரு வழித்தடத்தை மறித்துள்ளது. சாலையின் மேற்பரப்பிலும் அருகில் உள்ள புல்வெளிகளும் வாகனங்களின் டயர் கீறல்கள் தெரிகின்றது.
வாகனத்தில் இருந்த 2 நபர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர்.
இந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் சிக்கவில்லை.
மண்டாய் சாலை வெளியேறும் வழிக்கு முன்பு உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கி செல்லும் புக்கிட் தீமா விரைவுச் சாலையில், விபத்து நடந்துள்ளதாக ஏப்ரல் 3 ஆம்தேதி மாலை 6 மணி அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடிமைப் பாதுகாப்புப் படையினர், அங்கு 2 நபர்கள் காயங்களுடன் இருப்பதைக் கண்டு அவர்களுக்கு முதலுதவி செய்தனர். அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்தபோது அவர்கள லேசான காயம் என்பதால் அதனை மறுத்துவிட்டனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் சறுக்கி கவிழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்த விசாரணையை காவல்துறை மேற்கொண்டுள்ளது.