ஐநா சபையில் பங்கேற்ற சிங்கப்பூர் தூதுக்குழு..!! MFA அறிவிப்பு..!!
சிங்கப்பூர்: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நேற்று( மே 12) நடைபெற்ற உலகளாவிய காலமுறை மதிப்பாய்வின் (UPR) நான்காவது சுற்றில் சிங்கப்பூரின் தூதுக்குழு வெற்றிகரமாக பங்கேற்று உள்ளதாக, வெளியுறவு அமைச்சகம்( MFA) இன்று(மே 13) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் மேம்பாடு, தகவல் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் ரஹாயுதம்மா ஸான் 8 முதன்மைகளைக் கொண்ட தூதுக்குழுவிற்கு தலைமைத் தாங்கி உலகளாவிய காலமுறை மதிப்பாய்வில் பங்கேற்றுள்ளனர்.
அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மீள்திறன் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதில் சிங்கப்பூரின் அர்ப்பணிப்பையும், இது தொடர்பான அதன் தொடர்ச்சியான முயற்சிகளையும் அந்த மதிப்பாய்வில் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பன்முகத் தன்மை வாய்ந்த ஒரு நகரத் தீவாக சிங்கப்பூரின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மனித உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் சிங்கப்பூரின் முடிவுகளை நோக்கிய அணுகுமுறைகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு உலகளாவிய கால முறை மதிப்பாய்விற்கு பிறகு சிங்கப்பூர் அடைந்த முன்னேற்றங்கள் பற்றி சபையில் தூதுக்குழு முன் வைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் பணியிட சமத்துவச் சட்டம் இயற்றப்பட்டது மற்றும் நலிவடைந்த குழுக்களுக்கான ஆதரவு பலப்படுத்தப்பட்டது, நீதி கிடைப்பதற்கான அணுகல் மேம்படுத்தப்பட்டது, இணையப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது, டிஜிட்டல் உள்ளடக்கம் ஊக்குவிக்கப்பட்டது, காலநிலை அபாயங்களைக் கையாளுதல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மதிப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் ஆகியவை இதில் அடங்கும்.
சிங்கப்பூர் தனது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக கல்வி, வீட்டு வசதி மற்றும் சுகாதாரத் துறைகளில் தொடர்ந்து பெரும் அளவில் முதலீடு செய்து வருகிறது.
ஐ.நா சபை கூட்டத்தில் மனித உரிமைகளை அடைவதற்கு ஒரே ஒரு மாதிரி இல்லை என்று ரஹாயுமர் சுட்டிக்காட்டி உள்ளார். ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேசிய சூழ்நிலைகள் மற்றும் சமூக எதார்த்தங்களின் அடிப்படையில் பொருத்தமான அணுகுமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் உலகளாவிய காலமுறை மதிப்பாய்வில் மொத்தம் 142 நாடுகள் உரையாற்றியுள்ளன. அவற்றில் சமீபத்திய ஆண்டுகளில் சிங்கப்பூர் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து சில நாடுகள் எடுத்துரைத்துள்ளன.
தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நலனையும் மேம்படுத்துவதற்காக சிங்கப்பூரின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து பல நாடுகள் பாராட்டி உள்ளன.
அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளின் தொடர்ச்சியான பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் ஒரு தனித்துவமான சக மதிப்பாய்வு பொறிமுறையான உலகளாவிய கால முறை மதிப்பாய்வையும் (UPR) சிங்கப்பூர் மதிக்கிறது என்று வெளியூறவு அமைச்சகம் கூறியுள்ளது.
ஐநா இணையதளத்தின்படி, UPR என்பது மனித உரிமைகள் பேரவையின் ஒரு தனித்துவமான பொறிமுறையாகும். இது ஒவ்வொரு ஐநா உறுப்பினரும் தனது மனித உரிமைகள் பதிவேட்டை நானரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சக மதிப்பாய்வு செய்ய உட்படுத்த வேண்டும் . இந்த பொறிமுறையின் கீழ் ஒவ்வொரு நாடும் தனது உள்நாட்டு மனித உரிமைகள் நிலை மற்றும் சவால்களை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தவறாமல் அறிக்கை அளிக்க வேண்டும்.