சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகம் (NUS) : திடீர்தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) : திடீர் தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் (NUS) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெம்புசு கல்லூரியில் உள்ள ஒரு உணவுக் கடையின் சமையலறையில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து குறித்த செய்தியானது, ஏப்ரல் 2 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைக்கு தெரிவிக்கப்பட்டது.

28 காலேஜ் அவென்யூ ஈஸ்ட் என்கிற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

உணவுக் கடையின் சமையலறையில் இருந்த பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குடிமைப் பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்பே பொதுமக்கள் உலர் தூள் தீயணைப்பான்கள் மற்றும் தீயணைப்பு போர்வைகளைப் பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்பு படை இந்த விபத்து குறித்து கூறியதாவது:
பாதிக்கப்பட்டுள்ள இருவரும் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்த விசாரணையானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவரான ziqi829, சம்பவ இடத்திலிருந்து புகை வெளியேறும் காணொளிகளை Xiaohongshu என்ற சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து அனைத்து மாணவர்களும் கட்டடத்தை விட்டுப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் அந்த மாணவர் கூறியுள்ளார்.

விபத்து ஏற்பட்டுள்ள ஃப்ராக்ரண்ட் ஆஷ்வுட் கல்லூரியானது, தேசியப் பல்கலைக்கழகத்தின் யுனிவர்சிட்டி டவுனில் (UTown) உள்ள உறைவிடக் கல்லூரிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK