கைது செய்யப்பட்ட சீன இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் காவல்துறை நேற்று முன்தினம் (ஏப்ரல் 6 ) ஒரு அறிக்கை வெளியிட்டது. ஃபான் குவாங் யாவோ என்ற அந்த சீன இளைஞர், பிப்ரவரி 11ம் தேதி அன்று சுமார் 11:30 மணி அளவில், விமான நிலையத்தில் தனது கடவுச்சீட்டு மற்றும் பணப்பை தொலைந்து விட்டதாக விமான நிலையக் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதற்கு காவல் துறையினர் சீன தூதரகத்தில் மாற்றுக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அந்த இளைஞரிடம் கூறியபோது , கோபம் அடைந்த அந்த இளைஞர் அங்கிருந்த அதிகாரிகளிடம் கத்தியுள்ளார். காவல்துறையினர் அவரை அமைதப் படுத்த முயற்சித்த போதும் அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கத்தியுள்ளார்.
அவர் கட்டுப்பாட்டை மீறியதைக் கண்ட அதிகாரி ஒருவர் அந்த இளைஞரின் தோளில் 3 முறை கை வைத்து அவரை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர் அதனை கண்டுகொள்ளவில்லை.
அதிகாரி தோளைத் தொட்ட போது அந்த இளைஞர், அருகில் உள்ள மேசையில் தனது கையை ஓங்கி அடித்து விட்டு அதிகாரியிடம் தொடர்ந்து கத்தியுள்ளார். அந்த அதிகாரி இரண்டாவது முறையாக தொட்ட போது அதிகாரியின் கையைத் தள்ளிவிட்டு தொடர்ந்து கத்தியுள்ளார்.
அவர் கட்டுப்பாட்டை மீறியதைக் கண்ட அதிகாரி ஒருவர் அந்த இளைஞரின் தோளில் 3 முறை கை வைத்து அவரை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர் அதனை கண்டுகொள்ளவில்லை.
அதிகாரி தோளைத் தொட்ட போது அந்த இளைஞர், அருகில் உள்ள மேசையில் தனது கையை ஓங்கி அடித்து விட்டு அதிகாரியிடம் தொடர்ந்து கத்தியுள்ளார். அந்த அதிகாரி இரண்டாவது முறையாக தொட்ட போது அதிகாரியின் கையைத் தள்ளிவிட்டு தொடர்ந்து கத்தியுள்ளார்
தொடர்ந்து அதிகாரிகள் அவனை அடக்க முயன்ற போது திடீரென வன்முறையில் ஈடுபட்டு, அதிகாரிகளில் ஒருவரின் கையை கீறி உள்ளார். அதனால் அதிகாரியின் கையில் பல கீறல்கள் ஏற்பட்டது.
அதனால் அந்த இளைஞனை காவல் துறையினர் கைது செய்தனர். பின் ஏப்ரல் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒரு அரசு ஊழியரின் கடமையைச் செய்வதை தடுக்கும் வகையில் வன்முறையை மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர்தான் குற்றவாளி என கண்டறியப்பட்டு, 6 வாரங்கள் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தண்டனை வழங்கும் போது கூடுதலாக 2 குற்றச்சாட்டுகளும் பரிசீலனையில் உள்ளது.
அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் அறிவுறுத்தல்களுக்கு பயணிகள் ஒத்துழைக்குமாறு பயணிகளிடம் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.