சிங்கப்பூர் அரசியலில் முக்கிய மாற்றம்..!! எதிர்க்கட்சிகள் புதிய தலைமை அறிவிப்பு..!!
சிங்கப்பூரில் 2025 ஆம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி (PSP) மற்றும் மக்கள் சக்தி கட்சி(PPP) ஆகிய 2 எதிர்கட்சிகள் நேற்று (ஜூலை 7) தங்களது முக்கிய தலைமைத்துவ மாற்றங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
கடந்த 2025 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மக்கள் சக்தி கட்சி தனது மத்திய செயற்கை குழுவை (CEC) முழுமையாக மறு சீரமைத்துள்ளது.
கட்சியின் நிறுவனரும் நீண்ட காலப் பொதுச் செயலாளருமான கோ மெங் செங் மற்றும் கட்சியின் தலைவர் டெரிக் சிம் ஆகிய இருவரும் தங்களது பதவிகளில் இருந்தும் மத்திய செயற்குழுவில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகி உள்ளனர்.
கட்சியின் புதிய பொதுச் செயலாளராக வில்லியம் லிம் லியான் சின் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2025 பொதுத் தேர்தலில் முன்னோடித் தனித் தொகுதியில் போட்டியிட்ட 34.6% வாக்குகள் பெற்ற முக்கிய இளமுகமான ஸ்டெஃபனி டான் கட்சியின் செயல்பாட்டு திசையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியின் இளையர் பிரிவின் தலைவராகவும், இளம் வழக்கறிஞராகவும் இருந்த சாமுவேல் லிம் என்பவரும் கட்சியில் இருந்து வெளியேறியதை PSP தலைமை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த விலகல்களைத் தொடர்ந்து டேவிட் ஹெங் புதிய பொருளாளராகவும், அன்னபூரணி ரவிச்சந்திரன் நிகழ்ச்சிகளுக்கான துணை பொதுச் செயலாளராகவும் PSP கட்சியின் மத்திய செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.