இந்த விபத்தானது ஜூலை 8 ஆம் தேதி அன்று பிற்பகல் 3:25 மணி அளவில், ஆங் மோ கியோ அவென்யூ 10, ஆங் மோ கியோ அவென்யூ 1 சந்திப்பில் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய சைக்கிள் மிக மோசமான சேதமடைந்து காணப்படுகிறது. சைக்கிளோட்டி சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
இந்த விபத்தில் 61 வயது கார் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தற்போது காவல்துறையின் விசாரணைக்கு அவர் ஒத்துழைத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும்(SCDF), காவல்துறையினரும் தற்காலிக தடுப்பு அமைப்புகளை அமைத்து போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.