சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!!

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!!

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியரை சுத்தியலால் அடித்து கொலை செய்த, 56 வயதுடைய லோ சுவான் லிட், சிறையிலிருந்து விடுதலையான 6 மாதங்களில் உட்லண்ட்ஸ் வாடகை வீட்டில் மாரடைப்பால் இறந்து கிடந்ததது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணை நீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி அன்று நிறைவடைந்தது.

அவரது மரணத்தில் எந்த ஒரு சதித்திட்டமும் இல்லை எனவும், அது இயற்கை மரணம் எனவும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று சூவா சூ காங்கில் உள்ள ‘டெக் வாய் லேன்’ எனப்படும் சீன கோவிலுக்குள் திருடச் சென்றுள்ளார்.

அங்கு தன்னைத் தடுக்க முயன்ற கோவில் ஊழியர் தான் போ ஹுவாட்டை (வயது 53) சுத்தியலால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த கொலை குற்றத்திற்காக 2018 ஆம் ஆண்டில் லோ சுவான் லிட்டுக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 பிரம்படிகளும் தண்டனை வழங்கியது.

நன்னடத்தை அடிப்படையில் அவரது சிறைக்காலம் குறைக்கப்பட்டு, கடந்த வருடம் (2025) ஜூன் 30-ம் தேதி அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

விடுதலை ஆகிய 6 மாதங்கள் கழித்து ஜனவரி 6ஆம் தேதி அன்று உட்லன்ஸில் உள்ள அவரது வாடகை வீட்டில் அவர் தனியாக இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கக்கூடும் என மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவர் இதய நோயால் மரணம் அடைந்தது உறுதியானது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK