சிங்கப்பூரில் கார் வாங்கப் போறீங்களா..?? COE விலை S$130,000-ஐ தாண்டியது..!!

சிங்கப்பூரில் செப்டம்பர் மாதத்திற்கான முதல் சுற்று COE (Certificate of Entitlement) ஏல முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அனைத்து பிரிவுகளுக்கான COE விலையும் மீண்டும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கார்களுக்கான Category A COE விலை முதன்முறையாக S$130,000-ஐ கடந்துள்ளது.
Category A COE: சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கார்களுக்கான Category A COE விலை S$133,009 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஏலத்துடன் ஒப்பிடும்போது இது S$4,508 அதிகரிப்பு ஆகும். அதாவது சுமார் 3.39% உயர்வு ஏற்பட்டுள்ளது.
ategory B COE: பெரிய மற்றும் சொகுசு கார்களுக்கான Category B COE விலை S$135,001ஆக உயர்ந்துள்ளது. கடந்த சுற்றுடன் ஒப்பிடும்போது இது S$4,000 அதிகரிப்பு ஆகும்.
Category C COE: லாரிகள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கான Category C COE விலை S$93,101 ஆக பதிவாகியுள்ளது. இந்தப் பிரிவில் கடந்த ஏலத்தை விட S$3,099 அதிகரித்துள்ளது.
Category D COE: மோட்டார் சைக்கிள்களுக்கான Category D COE விலை S$12,556 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய சுற்றுடன் ஒப்பிடும்போது S$1,255 அதிகரிப்பு ஆகும்.
Category E COE: எந்த வகை வாகனத்திற்கும் பயன்படுத்தக்கூடிய Open Category எனப்படும் Category E COE விலை S$137,890 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சுற்றுடன் ஒப்பிடும்போது இது S$2,890 அதிகரிப்பு, சுமார் 2.1% உயர்வு ஆகும்.
செப்டம்பர் முதல் சுற்று COE விலைகள்:
Category A:S$133,009
Category B: S$135,001
Category C:S$93,101
Category D:S$12,556
Category E: S$137,890
நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளதன்படி, கடந்த COE ஏலத்திற்கும் தற்போதைய ஏலத்திற்கும் இடையில் 3 வார இடைவெளி இருந்ததால், COE விலைகள் தொடர்ந்து உயர்ந்த நிலையில் உள்ளன.
COE ஏலத்தில் பங்கேற்கும் வாகன வாங்குபவர்கள் மற்றும் கார் விற்பனையாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் ஏற்கனவே கார் வாங்குவதற்கான செலவு அதிகமாக உள்ள நிலையில், COE விலை தொடர்ந்து அதிகரித்து வருவது புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தக்கூடும்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
