சிங்கப்பூரில் 24 மணி நேர FairPrice..! Elias Mall-ல் திறக்கப்பட்ட புதிய சூப்பர்மார்க்கெட்டில் என்னென்ன வசதிகள்?

சிங்கப்பூரின் பாசிர் ரிஸ் பகுதியில் உள்ள Elias Mall-ல் புதிய FairPrice சூப்பர்மார்க்கெட் நேற்று (செப்டம்பர் 20 அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த புதிய கடை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய FairPrice கடை, பாரம்பரிய ஈரச்சந்தையில் கிடைக்கும் புதிய உணவுப் பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை, நவீன சூப்பர்மார்க்கெட்டின் வசதிகளுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக FairPrice தெரிவித்துள்ளது.
புதிய கடையின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று Fresh Food பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிக இடம்.
கடையின் மொத்த பரப்பளவில் கிட்டத்தட்ட பாதி இடம் fresh, chilled மற்றும் frozen உணவுப் பொருட்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பெரிய FairPrice சூப்பர்மார்க்கெட்டுகளில் காணப்படும் அளவைவிட அதிகமாகும்.
மேலும், புதிய கடையில் FairPrice-ன் மிகப்பெரிய 24 அடி நீளமுள்ள இரட்டை அடுக்கு seafood counter அமைக்கப்பட்டுள்ளது. இதில் fresh seafood, live seafood மற்றும் fresh produce போன்ற பல்வேறு பொருட்கள் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் seafood-ஐ வாங்கிய பிறகு அது தயாராகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. புதிய pickup முறையின் மூலம், seafood தயாராகும் நேரத்தில் கடையில் உள்ள மற்ற பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.
மேலும், இலவசமாக மீன் வெட்டுதல் மற்றும் vacuum packing சேவையும் வழங்கப்படுகிறது.
காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு தனிப்பட்ட பிரிவும், Malaysia-வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிங்கப்பூரில் உள்ளூர் முறையில் வெட்டப்படும் fresh pork-க்கான சிறப்பு counter-ம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் 10 மணி வரை, “Fresh Service Ambassador” எனப்படும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களைத் தேர்வு செய்வது மற்றும் சமையல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார்கள்.
இந்த புதிய FairPrice கடையில் Unity Pharmacy சார்பில் புதிய சுகாதார சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கத்திய dietary supplements மற்றும் பாரம்பரிய கிழக்கத்திய சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்டவை ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.
மேலும், வாடிக்கையாளர்கள் 3 நிமிட இலவச body composition analysis செய்து கொள்ளலாம். “Wellness Genie” மூலம் AI அடிப்படையிலான சுகாதார ஆலோசனைகளையும் பெற முடியும்.
தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு கடையில் பணியாற்றும் Unity Pharmacy மருந்தாளுநர்களிடமிருந்தும் தனிப்பட்ட ஆலோசனை கிடைக்கும்.
கடையில் ஒவ்வொரு வாரமும் brand showcases, promotions, product trials மற்றும் health education activities போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
மேலும், FairPrice-ன் வாராந்திர சலுகைகள், Link உறுப்பினர் சலுகைகள் மற்றும் தகுதியுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் CHAS அட்டைதாரர்களுக்கான சிறப்பு தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
இதன் மூலம் Elias Mall-ல் 24 மணி நேரமும் இயங்கும் புதிய FairPrice சூப்பர்மார்க்கெட், அப்பகுதி மக்களுக்கு உணவு, அன்றாட பொருட்கள் மற்றும் சுகாதார சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் புதிய வசதியாக அமைந்துள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
