படாம் பயணத்தில் சிக்கிய சிங்கப்பூர் பெண்..!! சுங்க சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் எட்டோமிடேட் கொண்ட 40 ஸோம்பி கார்ட்ரிட்ஜ்களை இந்தோனேசியாவின் படாம் தீவுக்கு கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் செப்டம்பர் 3ஆம் தேதி இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூரின் HarbourFront Centre-ல் இருந்து படாம் நோக்கிச் சென்ற அன்றைய கடைசி படகில் அந்தப் பெண் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் இரவு சுமார் 10 மணியளவில் படாம் சென்றடைந்தபோது, அங்குள்ள சுங்க அதிகாரிகளுக்கு அவரது நடையில் சந்தேகம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி மேலதிக சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சோதனையின்போது 40 ஸோம்பி கார்ட்ரிட்ஜ்களைக் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த ஸோம்பி கார்ட்ரிட்ஜ்களை உடலில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவற்றில் எட்டோமிடேட் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பெண் படாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசிய சட்டத்தின் கீழ் எட்டோமிடேட் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி Batam, Rempang மற்றும் Galang காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கைது செய்யப்பட்ட பெண் உட்பட பலர் தொடர்பான போதைப்பொருள் வழக்குகள் குறித்து அதிகாரிகள் தகவல் வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் தகவலின்படி, சம்பந்தப்பட்ட பெண் செப்டம்பர் 3ஆம் தேதி HarbourFront Centre-ல் இருந்து Batam செல்லும் படகில் ஏறியுள்ளார்.
சிங்கப்பூரில் கார்ட்ரிட்ஜ் மற்றும் எட்டோமிடேட் தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு சோதனைகளை கடந்து அந்தப் பொருட்களை வெளியே கொண்டு சென்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக படாம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான பரிசோதனை முடிவுகள் மற்றும் வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இறுதி முடிவு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
