சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!!

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!!

சிங்கப்பூர்: குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்தின்(ICA) அதிகாரிகள் சமீபத்தில் சாங்கி விமான நிலையத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையானது மார்ச் 19ஆம் தேதி சாங்கி விமான நிலையம் முனையம் ஒன்றில் நடந்ததாக ICA தனது பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த சோதனையில் சந்தேகத்தின் பேரில் 57 வயது சீன நபர் ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கினார். ICA அதிகாரிகளிடம் பிடிபட்ட அந்த நபரை விசாரித்த போது அவரிடம் 10 அட்டை பெட்டி சிகரட்டுகள் உள்ளது தெரியவந்தது.

பின்னர் அவரை சோதனை செய்தபோது, அவரது உடைமைகளில் இருந்து 218 அட்டை பெட்டி சிகரெட் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் 57 வயதான சீன நபரையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளையும் மேல் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ICA தெரிவித்திருக்கிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK