DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!!

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!!

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் DBS வங்கியில் விற்பனை இலக்குகளை எட்டும் நோக்கத்தில் ஆவணங்களில் மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2 ஜப்பானிய வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட இரு குற்றங்களை வங்கியின் முன்னாள் நிதி நிர்வாக அதிகாரியான விஜேந்திரன் தனபால் ஒப்பு கொண்டுள்ளார்.

அதிலும் ஜப்பானிய வாடிக்கையாளர்களுக்கு “மனுலைஃப்” காப்புறுதிக் கொள்கைகளை விற்பது வங்கியின் நிதி நிர்வாக அதிகாரியின் பொறுப்பு.

அவ்வாறு காப்புறுதிக் கொள்கைகளை வாங்கும் ஜப்பானியர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஜப்பானில் வசிப்பவராக இருக்கக் கூடாது. அவர்கள் வேறு நாடுகளில் வசித்து இருப்பதாக வங்கியில் நிரூபிக்க வேண்டும்.

ஜப்பானியர்களுக்கு அந்நாட்டில் வழங்கப்படும் காப்புறுதிச் சட்டத் திட்டங்களை மீறாமல் இருக்க இந்த விதிமுறைகள் மனுலைஃப் காப்புறுதித் திட்டத்தில் முக்கியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

விஜேந்திரன் கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த மோசடி குற்றங்களை செய்துள்ளார். காப்புறுதி விண்ணப்பத்தின் போது சிங்கப்பூரில் அடுத்த 3 ஆண்டுகள் அந்த ஜப்பானியர்கள் இருந்தால் போதுமானது என்று அவர்களிடம் விஜேந்திரன் பொய்யான விதிமுறைகளைக் கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் விண்ணப்பத்திற்கு முன்பாகவே சிங்கப்பூரில் 3 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்பதே விதிமுறையில் இடம் பெற்று இருந்தது என்று அரசாங்க வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

தண்டனை விதிப்பின் போது, வேறு ஜப்பானிய வாடிக்கையாளர்களிடமும் இதே போன்ற குற்றங்களை விஜயந்திரன் புரிந்துள்ளதாக கண்டறியப்பட்டது.

மேலும் வங்கிக்கு தெரியாமல் விஜேந்திரன் அந்த ஜப்பானிய வாடிக்கையாளர்களிடம் வங்கி அறிக்கைகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றில் சில மாற்றங்களை செய்ததும் காவல்துறையின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதற்காக, 38 வயதான விஜேந்திரன் தனபாலுக்கு 7 வார சிறைத் தண்டனையை நேற்று (ஏப்ரல் 9) நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK