4 மணி நேரம் முடங்கிய DBS PayLah!..பணத்தை திருப்பி தரும் வங்கி..!!

4 மணி நேரம் முடங்கிய DBS PayLah!..பணத்தை திருப்பி தரும் வங்கி..!!

சிங்கப்பூரின் DBS வங்கியின் PayLah! 4 மணி நேரத்திற்கும் மேலாக சேவை முடக்கத்தைச் சந்தித்துள்ளது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு பணம் முழுமையாக திருப்பி தரப்படும் என்று DBS வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நேற்று (ஜூலை 23) இரவு சுமார் 9:00 மணிக்கு பிறகு இந்த சேவை முடக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் நள்ளிரவைத் தாண்டி (ஜூலை 24) அதிகாலை 1:38 மணி அளவில் தான் இந்த சேவை மீண்டும் முழுமையாக சீரமைக்கப்பட்டது.

இந்த தடையின் போது வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்யவோ, கட்டணங்களை செலுத்தவோ முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். பலருக்கும் பரிவர்த்தனைகள் தோல்வி அடைந்தன மற்றும் கட்டணப் பதிவுகள் காட்டப்படவில்லை.

சேவை முடக்கத்தின் போது வாடிக்கையாளர்கள் தங்களின் DBS/POSB டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் ‘Scan & Pay’ அல்லது digibank செயலியை மாற்று வழிகளாகப் பயன்படுத்துமாறு DBS வாங்கி கேட்டுக் கொண்டது.

இந்த தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளின் தொகையும் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தரப்படும் என்று வங்கி உறுதியளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பணம் நேரடியாக அவர்களின் PayLah! வேலட்டிலேயே (Wallet) மீண்டும் கிரெடிட் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் (2026) DBS வங்கியின் டிஜிட்டல் சேவைகள் பொதுவெளியில் முடக்கத்தைச் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு மார்ச் 19 அன்று வரும் முறை digibank மற்றும் PayLah! சேவைகள் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.