சிங்கப்பூரில் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தடை..!! பயனர்களின் நிலை என்ன..??
சிங்கப்பூரில் இன்று(மார்ச் 19) நண்பகலில் இருந்து DBS மற்றும் SV வங்கிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
அந்த வங்கிகளின் பயனாளர்கள் சிலர் இந்த இடையூறு குறித்த புகார்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
பயனாளர்கள் வங்கி செயலியில் கணக்கு தகவல்கள் பார்ப்பதற்கும், பணப்பரிமாற்றம் செய்வதற்கும் அல்லது PayNow ஆப்ஷனை பயன்படுத்தவும் முடியவில்லை என்று கூறியுள்ளனர்.
இன்று பிற்பகல் 12:30 மணிக்குள் 2,000 க்கும் மேற்பட்ட புகார்கள் இது குறித்து அளிக்கப்பட்டுள்ளதாக டவுன்டிடெக்டர் (Down Detector)என்ற இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த இடையூறால் E-Banking மற்றும் பணப்பரிமாற்ற சேவைகள் போன்றவற்றை பயன்படுத்த முடியவில்லை என்றும் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து DBS வங்கியானது மதியம் 1:00 மணி அளவில் இந்த இடையூறுகளைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தனது facebook பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.
அதுவரை பாதிக்கப்பட்ட பயனாளர்கள் அவர்களது வங்கி அட்டைகளின் மூலமாகவோ, ஏடிஎம் கார்டுகளின் மூலமாகவோ பணம் எடுக்கலாம் என்று கூறியுள்ளது.
இதுபோன்று கடந்த ஆண்டு 2025 ஜூன் மாதம் 2 மணி நேரத்திற்கு மேலாக DBS, POS பயனாளர்களால் டிஜிட்டல் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியவில்லை.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி இதேபோன்று இடையூறு ஏற்பட்டதால் DBS வங்கிக்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் 6 மாதங்கள் கட்டுப்பாடு விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்க நிலைக்கு திரும்பிய வங்கிச் சேவைகள்: ✨இந்த இடையூறு சேவைகளுக்கு பிறகு பிற்பகல் 1:19 மணியளவில் DBS, POS வங்கிகளின் இணையம் மற்றும் கைப்பேசி சேவைகள் சரி செய்யப்பட்டதாக DBS வங்கி ஆனது பிற்பகல் 2 மணி அளவில் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.