இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியதாவது: இந்த தீ விபத்து சம்பவமானது நேற்று (ஏப்ரல் 9 ) திறந்தவெளி வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த தகவலானது தங்களுக்கு நேற்று (ஏப்ரல் 9) இரவு 8:05 மணி அளவில் கிடைத்துள்ளததாகவும் தெரிவித்துள்ளது.
குப்பை லாரியில் இருந்த பொருட்கள் மூலம் இந்த தீ பற்றி இருக்கலாம். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு தீயணைப்புக் குழாய்களைப் பயன்படுத்தி எரிந்து கொண்டிருந்தத் தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதில், நீல நிறக் குப்பை லாரியில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறுவது போன்ற காணொளிப் பகிரப்பட்டு வருகிறது. அதில் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் குழாய்களைப் பயன்படுத்தியப் பதிவும் காணப்படுகிறது.